எல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; அக்குரஸ்ஸயில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு

எல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; அக்குரஸ்ஸயில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு

எல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; அக்குரஸ்ஸயில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2019 | 3:35 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பகுதியில் பஸ் ஒன்றினுள் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் காணி தொடர்பான வழக்கொன்றின் நிமித்தம் பஸ்ஸில் பயணித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளதாகவும் துப்பாக்கிதாரி தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச்சென்றுள்ள சந்தேகநபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அக்குரஸ்ஸ – பானதுகம பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாத்தறை தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்