அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்த இம்ரான் கான்

அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்த இம்ரான் கான்

அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்த இம்ரான் கான்

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2019 | 4:21 pm

பாகிஸ்தானில் அறிக்கைகள் சமர்ப்பிக்காத 27 அமைச்சர்களுக்கு பிரதமர் இம்ரான் கான் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் தமது அமைச்சுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுவரை அறிக்கைகளை சமர்ப்பிக்காத 27 அமைச்சர்களுக்கு இறுதி அறிவித்தலாக சிவப்பு அறிவித்தலை விடுத்து இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் அமைச்சர்கள் தமது அமைச்சுக்களின் பொறுப்புக்கூறல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொறுப்புக்கூறல் தொடர்பில் அமைச்சர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்