by Bella Dalima 05-09-2019 | 8:32 PM
Colombo (News 1st) அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய சுதந்திரமான சூழல் நீதித்துறையில் கடந்த 5 வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பொலன்னறுவையில் இன்று தெரிவித்தார்.
நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்தல், நீதிமன்றம் தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து தனக்கு முன்னர் ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது காலப்பகுதியில் எவ்வித அழுத்தங்களுமின்றி நீதித்துறையில் சேவையாற்றும் நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
327 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதி ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியில் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.