அமைச்சர் சஜித்தை வரவேற்கும் நிகழ்வு குருணாகலில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று குருணாகலில்

by Staff Writer 05-09-2019 | 10:50 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று (05) குருணாகலில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் குருணாகல் சத்யவாதி மைதானத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய நிகழ்வில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.