பெற்றோலியக் கூட்டுத்தாபன மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

பெற்றோலியக் கூட்டுத்தாபன மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

பெற்றோலியக் கூட்டுத்தாபன மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 10:14 am

Colombo (News 1st) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆறரை கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட பிரதான அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் புனரமைப்புப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த நிதி மோசடி தொடர்பில் உதவி விநியோக முகாமையைாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோசடிகளுக்காக தென் மற்றும் ஊவா மாகாண அலுவலகங்களில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரை அனுமதியின்றி தலைமை அலுவலகத்திற்கு அழைத்துவந்து அவரின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்