ஜோதிகாவிற்கு புகழாரம் சூட்டினார் மலேசிய அமைச்சர்

ஜோதிகாவிற்கு புகழாரம் சூட்டினார் மலேசிய அமைச்சர்

ஜோதிகாவிற்கு புகழாரம் சூட்டினார் மலேசிய அமைச்சர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Sep, 2019 | 6:32 pm

ஜோதிகா நடிப்பில் அண்மையில் ராட்சசி படம் வௌியானது.

ராட்சசி சமூக மாற்றத்திற்கான ஒரு படம் என மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் (Maszlee Bin Malik) சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான விடயங்களை இந்தப் படம் வௌிப்படுத்தியுள்ள அதேநேரம், கல்வித்துறையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளது.

அத்தோடு, படத்தில் ஜோதிகா சிறந்த நடிப்பை வௌிப்படுத்தியுள்ளதாகவும் பெற்றோர், மாணவர் என அனைவரும் பார்க்கவேண்டிய படம் எனவும் மலேசிய கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்