ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 9:48 pm

Colombo (News 1st) அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அடுத்த கட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாக வீரக்குமார் திசாநாயக்க குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் தினங்களில் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்