சுற்றுலாப் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள்

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள்

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 1:25 pm

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுமார் 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் சுற்றுலாப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பிலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பொலிஸ் சுற்றுலாப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடமாடும் பொலிஸ் பிரிவை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கற்பிட்டி, நிலாவௌி, செம்புவத்த, திக்வெல்ல, திஸ்ஸமகாராம போன்ற பகுதிகளை கேந்திரமாகக் கொண்டு இவை ஸ்தாபிக்கப்படவுள்ளன.

நடமாடும் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்