ஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது

ஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது

ஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 2:45 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத சந்தேகநபர்கள், அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (05) காலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் விசாரணைகள் நிறைவடைந்த 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேகநபர்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய 41 சந்தேகநபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் முடக்கப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்