6 பயணப்பொதிகளுடன் அமெரிக்க விமானத்தில் வந்தவர்கள் யார்: விமல் வீரவன்ச கேள்வி

by Bella Dalima 04-09-2019 | 8:34 PM
Colombo (News 1st) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி கொழும்பு - ஹில்டன் ஹோட்டலுக்கு 6 அமெரிக்க பிரஜைகள் பாரிய பயணப்பொதிகளுடன் வருகை தந்ததாகவும் தனி விமானத்தில் வருகை தந்த அவர்கள், தமது பயணப்பொதிகளை சோதனையிடுவதை விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார். அந்த விமானம் அமெரிக்க அரசாங்கத்தின் விமானம் என்பதால், விமான நிலையத்தில் உரிய சோதனை நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்த KL 6586 என்ற ஜீப்பில் அவர்களின் பயணப்பொதிகள் ஏற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அந்த பொதிகள் எங்கு சென்றன, யார் அவர்கள் என கேள்வி எழுப்பினார்.
புள்ளிவிபரங்களுக்கு அமைய, வந்தவர்கள் இரணடு நாட்களில் மாலைத்தீவிற்கு சென்றனர். கொண்டு வந்த பயணப்பொதிகளை இங்கு வைத்து விட்டு சென்றனர். எதற்காக இவை கொண்டுவரப்பட்டன? எதற்காக இங்கு அவற்றை வைத்துவிட்டுச் சென்றனர்? சோதனையிடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்தனர்? சோதனையிட்டால் பிரச்சினை ஏற்படும் விடயங்கள் காணப்பட்டமையினாலா? அவ்வாறு எனின், அவற்றில் என்ன இருக்கின்றது
என விமல் வீரவன்ச தமது கேள்விகளை முன்வைத்தார்.