மருத்துவ கழிவுகளை வௌியேற்றுவோர் மீது நடவடிக்கை

முறையற்ற வகையில் மருத்துவக் கழிவுகளை வௌியேற்றுவோர் மீது சட்ட நடவடிக்கை

by Staff Writer 04-09-2019 | 2:07 PM
 Colombo (News 1st) அண்மைக் காலமாக முறையற்ற வகையில் வைத்தியசாலைகளிலிருந்து மருத்துவக் கழிவுகளை வௌியேற்றும் நடவடிக்கையூடாக சிலர் வருமானத்தை ஈட்ட முயற்சித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மைக் காலமாக சில வைத்தியசாலைகளிலிருந்து மருத்துவக் கழிவுகள் முறையற்ற வகையில் வௌியேற்றப்படுவதாகவும் அஜித் வீரசுந்தர மேலும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, மருத்துவக் கழிவுகளை வௌியேற்றுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.