திருகோணமலையில் முன்னறிவித்தல் இன்றி நீர்வெட்டு

திருகோணமலையில் முன்னறிவித்தல் இன்றி நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

by Staff Writer 04-09-2019 | 10:32 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் நீரின்றி சிரமப்படுவதாக திருகோணமலை மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் வினவியபோது, திருகோணமலை மாவட்டத்திற்கு நீரை சுத்திகரித்து பெறும் மகாவலி மற்றும் கந்தளாய் ஆகிய குளங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைதுள்ளதால், நீர்விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக திருகோணமலை நகர் பகுதியிலுள்ள பாவனையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குளங்களிலிருந்து மேலதிக நீர் வௌியேறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விரைவில் குடிநீர் விநியோகத்தை வழமைக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்