வன்முறைகளுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி கண்டனம்

வௌிநாட்டவர்கள் மீதான வன்முறைகளுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி கண்டனம்

by Staff Writer 04-09-2019 | 12:43 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவிலுள்ள வௌிநாட்டவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஸா (Cyril Ramaphosa) கண்டனம் வௌியிட்டுள்ளார். தென்னாபிரிக்கர்கள் யாராவது வௌிநாடுகளைச் சேர்ந்தவர்களைத் தாக்கியிருந்தால் அவர்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடையாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த வன்முறைகள் தொடர்பில் ஆபிரிக்காவின் ஏனைய அரசுகளும் தமது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வெளிநாட்டு பிரஜைகள் நடத்தும் வர்த்தகம் மீதான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தென்னாபிரிக்காவில் அவ்வாறு நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி சிறில் ரமபோஸா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதேநேரம், இதுபோன்ற வன்முறைகளை எதிர்த்து ஆபிரிக்க ஒன்றியமும் கண்டன அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ஆவணங்கள் அற்ற புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துமாறு கோரி குடியிருப்பாளர்கள் சிலர் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.