சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2019 | 4:24 pm

நடிகை ஸ்ரீதேவியின் நினைவாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு உயிரிழந்த ஸ்ரீதேவியின் நினைவாக பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமைத்துள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

கஜோல், கரண் ஜோஹர், ஷாருக்கான், வருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர், கேத்ரினா கைஃப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீக்‌ஷித், சத்யராஜ் உள்ளிட்டோரின் சிலைகளும் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்