ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடாந்த மாநாடு இன்று நடைபெற்றது

by Staff Writer 03-09-2019 | 3:53 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமானது. இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்கால நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கொள்கைத் திட்டமும் வெளியிடப்பட்டது. பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன ஆகியோரும் இம்முறை மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். ''சுதந்திரத்திற்கான பாதுகாப்பு'' எனும் தொனிப்பொருளில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு காப்புறுதி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்காக எழுதப்பட்ட ''சுனில ஜனவாதய'' எனும் நூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.