பொலிஸ் அதிகாரிகள் 42 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகள் 42 பேருக்கு இடமாற்றம்

by Staff Writer 03-09-2019 | 12:11 PM
Colombo (News 1st) பொலிஸ் அதிகாரிகள் 42 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேவைகருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஐவருக்கும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 14 பேருக்கும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 23 பேருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.