ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருட பூர்த்தி மாநாடு இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருட பூர்த்தி மாநாடு இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருட பூர்த்தி மாநாடு இன்று

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 6:45 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடப் பூர்த்தி மாநாடு இன்று (03) நடைபெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இம் மாநாடு நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் 68 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களுக்கான தீர்மானமிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, சிறந்த மாநாடொன்றை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனை வெற்றிகரமாக நடத்துவதற்காக எமது கட்சியின் ஆதரவாளர்கள் அரங்கிற்கு காலை முதல் வருகை தருகின்றனர். கட்சி என்ற வகையில், கட்சியின் எதிர்கால பயணத்தை சக்தி மிக்கதாக்குவதற்கு அனைத்து ஆதரவாளர்களின் ஆதரவும் எமக்கு கிடைத்துள்ளது. இன்றைய மாநாட்டில் எமது பல கொள்கைககள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளோம். எதிர்கால செயற்பாடுகள், எமது கட்சியை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது ஆகிய விடயங்கள் தொடர்பில் இன்று நாம் தெரிவிக்கவுள்ளதாக

அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்