வீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை இளையவர்களுக்கு கூறுங்கள்: கோட்டாபய ராஜபக்ஸ

வீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை இளையவர்களுக்கு கூறுங்கள்: கோட்டாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 8:21 pm

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ முதலில் வருகை தந்ததுடன், அவர் வரவேற்கப்பட்டதை அடுத்து அங்கு உரையாற்றினார்.

தனது உரையில் அவர் தெரிவித்ததாவது,

வறுமையிலிருந்து மக்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பில் ஆராய்கையில், பெரும்பாலான நாடுகளின் முறைமை குறித்து கவனம் செலுத்தினோம். சீனா வறுமையை எவ்வாறு ஒழித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வருடம் சீனா எனக்கு விசேட அழைப்பொன்றை விடுத்தது. முருங்கை செய்கை மூலம் இன்று எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும். தர்பூசணியில் பழச்சாறு தயாரித்து அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பும் இளைஞர் ஒருவரை நான் சந்தித்தேன். இவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இன்று உலகில் காணப்படுகின்றன. எனது பாடசாலையில் ஒரு இளைஞரை நான் சந்தித்தேன். அந்த இளைஞர் வீடியோ கேம் விளையாடி, தமது நண்பருடன் அதனை இணையத்தில் பதிவேற்றி பாரியளவு தொகையை அறவிடுகின்றனர். உங்கள் வீடுகளிலும் இளையவர்கள் இருந்தால், வீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை அவர்களுக்குக் கூறுங்கள்.

கோட்டாபய ராஜபக்ஸவின் உரை நிறைவடைந்ததை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்விற்கு வருகை தந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, தாம் வைத்த பெயர்களை மாத்திரமே தற்போதைய அரசாங்கம் மாற்றியுள்ளதாகவும், பெயர்களை மாற்றுவது பாரிய வேலையல்ல எனவும் குறிப்பிட்டார்.

திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டபோது, பல தடைகளை எதிர்நோக்கியதாகவும் திணைக்கள சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும், தாம் அந்தத் திணைக்களத்தை உருவாக்கியதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்