மாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்திக்கு சிறந்த விலை

மாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்திக்கு சிறந்த விலை

மாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்திக்கு சிறந்த விலை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 12:39 pm

Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய உற்பத்திக்கு சிறந்த விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடவை மாத்தளை மாவட்டத்தில் 800 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் 2 800 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கை செய்யப்பட்ட போதிலும், உரிய விலை கிடைக்காதமையால் விவசாயிகள் வெங்காய செய்கையிலிருந்து விலகியிருந்தனர்.

சில வருடங்களுக்கு பின்னர் தமது அறுவடைக்கு சிறந்த விலை கிடைத்துள்ளதால், எதிர்வரும் காலத்தில் பெரிய வெங்காய செய்கையை முன்னெடுக்க முடியும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்