பதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு

பதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு

பதவி விலகல் தொடர்பில் ஹொங்கொங் தலைவர் மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 12:58 pm

Colombo (News 1st) பதவி விலகத் தயாராகவிருப்பதாக வௌியான தகவலை ​ஹொங்கொங் தலைவர் கெரி லேம் (Carrie Lam) மறுத்துள்ளார்.

தம்மால் முடிந்தால் தாம் பதவி விலகுவதாகத் தெரிவிக்கும் ஒலிநாடா ஒன்று வௌியாகியிருந்த நிலையிலேயே கெரி லேம் இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சந்திப்பு ஒன்றில் கெரி லேம் கருத்துத் தெரிவிக்கும் ஒலிப்பதிவு ஒன்று நேற்றைய தினம் வௌியாகியிருந்தது.

குறித்த ஒலிப்பதிவில் தமக்கு ஒரு தெரிவு இருக்குமென்றால், முதலாவது பதவி விலகுவதாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்ததாகப் பதிவாகியிருந்தது.

இது தொடர்பில் இன்று (03) கருத்து வௌியிட்ட அவர், பதவி விலகுவது குறித்து தாம் எதுவும் குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், நேற்று வௌியாகிய ஒலிப்பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் கெரி லேம் கருத்து எதனையும் வௌியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்