சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 8:38 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்களால் யாழ்ப்பாணம் – சுதுமலை அம்மன் ஆலயத்தில் இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.எம்.விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்