குயினஸ் விருதை சுவீகரித்தார் போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

குயினஸ் விருதை சுவீகரித்தார் போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

குயினஸ் விருதை சுவீகரித்தார் போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 2:30 pm

போர்த்துக்கல் அணிக்காக தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பிரகாசித்தவர்களைக் கௌரவிப்பதற்காக குயினஸ் விருது வருடாந்தம் வழங்கப்படுகின்றது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த விருது வழங்கல் விழாவை வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றது.

அதன்படி, இவ்வருட விருது வழங்கல் விழா போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பேர்னில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போர்த்துக்கல் அணியின் ஜெசிக்கா சில்வா ஆண்டின் அதிசிறந்த வீராங்கனையாக தெரிவானார்.

சிறந்த பயிற்றுநருக்கான விருதைப் போர்த்துக்கல் அணியின் பயிற்றுநரான பெர்னாண்டோ சான்டோஸுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்