ஏப்ரல் 21 தாக்குதல்; அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

ஏப்ரல் 21 தாக்குதல்; அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

ஏப்ரல் 21 தாக்குதல்; அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 9:06 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் முதல் அந்தந்த நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பில் பிரதான ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல், கொச்சிக்கடை, நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி மற்றும் மட்டக்களப்பு – சியோன் தேவாலய தாக்குதல் மற்றும் சாய்ந்தமருது பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான குற்றவியல் விசாரணை அறிக்கைகள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இரசாயனப் பகுப்பாய்வாளர்
A. வெலிஅங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் யூரியா நைட்ரேற் எனப்படும் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளமை இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் முதலாவதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏனைய அறிக்கைகள் விரைவில் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையைத் தயாரிப்பதற்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் 7 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்