எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 11:08 am

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் 15 ஆம் திகதிக்குள் நடத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்த 30ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் செயலாளர் தாக்கல்செய்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்தபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்