இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 4:05 pm

Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இந்த போர்ப்பயிற்சி இடம்பெறவுள்ளது.

வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், இலங்கை இராணுவ சிப்பாய்கள் 2400 பேர், கடற்படை சிப்பாய்கள் 400 பேர் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் 200 பேரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மலேசியா, மாலைத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட வௌிநாட்டு இராணுவத்தினர் போர்ப்பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்