ஜனாதிபதியால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது – நீதிமன்றம்

ஜனாதிபதியால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது – நீதிமன்றம்

ஜனாதிபதியால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது – நீதிமன்றம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

02 Sep, 2019 | 7:13 pm

Colombo (News 1st) எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்றி ஜனாதிபதியால் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை இன்றி தேர்தலை நடத்துவதற்குரிய இயலுமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி கோரியிருந்தார்.

இந்த விண்ணம் குறித்து பிரதம நீதியரசர் தலைமையிலாள ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் கடந்த 28 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மீளாய்வு குழுவின் அறிக்கை இன்று திருத்தச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான இயலுமை ஜனாதிபதிக்கு இல்லை என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

மாகாண சபை திருத்த சட்டத்தினூடாக பழைய முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்