பொருளாதாரத்தில் ஆடைத் தொழிற்றுறை பிரதான பங்கு

பொருளாதாரத்தில் பிரதான பங்குவகிக்கும் ஆடைத் தொழிற்றுறை

by Staff Writer 01-09-2019 | 6:54 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழிற்றுறை பிரதான நிலையை நோக்கி நகர்வடைந்து வருகின்றது. இவ்வாண்டிற்கான வருமான இலக்கினை இலங்கையின் ஆடைத் தொழிற்றுறை தற்சமயம் பூர்த்திசெய்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ் வருடத்தின் முதல் அரையாண்டின் வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் பதிவாகாத அளவிற்கு உயர்வடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் 2017 ஆம் ஆண்டில் 2281 மில்லியன் அமெரிக்க டொலராகவும் 2018 ஆம் ஆண்டில் 2395 மில்லியன் டொலராகவும் இவ்வாண்டு 2620 மில்லியன் டொலராகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.