by Chandrasekaram Chandravadani 01-09-2019 | 2:57 PM
Colombo (News 1st) களுத்துறை, ஹொரண மற்றும் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 24 அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
80 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் இதன்மூலம் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்திற்காக 17 இலட்சம் ரூபாவை நிதியமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.