பொருளாதாரத்தில்  பிரதான பங்குவகிக்கும் ஆடைத் தொழிற்றுறை

பொருளாதாரத்தில் பிரதான பங்குவகிக்கும் ஆடைத் தொழிற்றுறை

பொருளாதாரத்தில் பிரதான பங்குவகிக்கும் ஆடைத் தொழிற்றுறை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 6:54 pm

Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழிற்றுறை பிரதான நிலையை நோக்கி நகர்வடைந்து வருகின்றது.

இவ்வாண்டிற்கான வருமான இலக்கினை இலங்கையின் ஆடைத் தொழிற்றுறை தற்சமயம் பூர்த்திசெய்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ் வருடத்தின் முதல் அரையாண்டின் வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் பதிவாகாத அளவிற்கு உயர்வடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருமானம் 2017 ஆம் ஆண்டில் 2281 மில்லியன் அமெரிக்க டொலராகவும் 2018 ஆம் ஆண்டில் 2395 மில்லியன் டொலராகவும் இவ்வாண்டு 2620 மில்லியன் டொலராகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்