புதுக்கடை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

புதுக்கடை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

புதுக்கடை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 2:49 pm

Colombo (News 1st) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (01) இந்தத் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பின் ஏற்பாட்டாளர் மெடில்லே பஞ்சாலோக தேரர், ராவணா பலயவின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள தயாராகியுள்ளவர்களுக்கே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்