பிரித்தானிய விமானங்கள் தாமதம்

பிரித்தானிய விமானங்கள் தாமதம்

பிரித்தானிய விமானங்கள் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 4:54 pm

Colombo (News 1st) பிரான்ஸின் வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமையால் பிரித்தானிய விமானங்கள் தாமதமடைந்துள்ளன.

பிரித்தானியாவிலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் சில விமானங்கள் தாமதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமையால், பிரான்ஸ் மற்றும் ஸ்பானிய வான் பரப்பினூடாகப் பயணிக்கும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் எயாவேய்ஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்தநிலையில் வான்போக்குவரத்து சமிக்ஞைக்கட்டமைப்பின் செயலிழப்பு காரணமாக விமானப்போக்குவரத்தில் மேலும் தாமதம் ஏற்படலாமென விமானசேவை நிறுவனங்கள் சில அறிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்