டெக்ஸாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் உயிரிழப்பு

டெக்ஸாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் உயிரிழப்பு

டெக்ஸாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 2:22 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

வாகனமொன்றை செலுத்திவந்துள்ள துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாகிதாரி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 வாரங்களிற்கு முன்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் எல்பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்