ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு அறிக்கை இம்மாதம் ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு அறிக்கை இம்மாதம் ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு அறிக்கை இம்மாதம் ஜனாதிபதியிடம்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 2:04 pm

Colombo (News 1st) கடந்த வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு அறிக்கை, இம் மாதத்துக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போது சாட்சி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் 20 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தகவல்களையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, விவசாய அமைச்சுக்கு குத்தகை அடிப்படையில் கட்டடமொன்றை பெற்றுக்கொடுத்தமை, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை கையகப்படுத்தாமல் அரசின் நிதி செலவு செய்யப்படுகின்றமை மற்றும் நெடுஞ்சாலை ஆணையகத்திற்கு அரசியல் தொடர்புகொண்ட பணியாளர்களின் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளும் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்குகின்றன.

மேலும், பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்களும் கடந்த வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்