இயற்கை வளத்தை பாதுகாக்கும் V- Force செயற்றிட்டம் எல்ல மலைப்பகுதியில் இன்று

by Staff Writer 01-09-2019 | 12:10 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி V- Force திட்டத்தின் மற்றுமாரு கட்டம் இன்றைய தினம் (01) பதுளை - எல்ல மலைப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 22ஆம் திகதி இராவணா எல்ல வன பகுதிக்குரிய எல்ல மலைப்பகுதியில் தீ பரவியது. அழிந்துபோகும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்றைய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் வாழ்ந்துவரும் மக்களைத் தேடி, இன்று 14 ஆவது நாளாக மக்கள் சக்தி - மக்கள் மன்றம் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்றைய செயற்றிட்டம், அனுராதபுரம் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.