இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2019 | 6:10 pm

Colombo (News 1st) பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதுடன் அவரது பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடைகின்றது.

இந்தநிலையில், ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தினால் இன்று (01) ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்