ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

by Staff Writer 31-08-2019 | 8:02 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் பொருட்கோடல் தொடர்பிலான அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லையென சிரச FM-இல் ஒலிபரப்பான சட்டன நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எமக்கு 50 நாட்கள் தேவை. இன்றிலிருந்து 50 நாட்கள் என்று பார்த்தால் ஒக்டோபர் 20 ஆம் திகதியும் தாண்டுகின்றது. ஒக்டோபர் 20 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு ஒரு வார காலம் தேவைப்படும். அது சிரமமான விடயம். தற்போது அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றத்தில் கோர வேண்டி ஏற்படும்.
என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.