ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணிக்கான யாப்பு உருவாக்கப்படவுள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணிக்கான யாப்பு உருவாக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 8:29 pm

Colombo (News 1st) உதயமாகவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணிக்கான யாப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) உருவாக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணிக்காக சிறிய கட்சிகள் சிலவும் ஒன்றிணையவுள்ளன.

இதன் பிரகாரம் மஹஜன எக்சத் பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவுள்ளன.

புதிய கூட்டமைப்பின் நிர்வாகம் நிறைவேற்று சபைக்கு வழங்கப்படுவதுடன், கூட்டமைப்பின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கிடைக்கவுள்ளதாகவும் செயலாளர் பதவியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணியின் யாப்பு தொடர்பிலான உடன்படிக்கை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்