வவுனியாவில் மக்கள் மன்றம் செயற்றிட்டம்

வவுனியாவில் மக்கள் மன்றம் செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 8:49 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி கிராமங்கள் தோறும் மக்கள் மன்றம் செயற்றிட்டம் இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் மன்றம் செயற்றிட்டத்தின் 13 ஆவது நாள் இன்றாகும்.

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை மக்கள் மன்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதிகளவிலான மக்கள் வருகை தந்து அதிகாரிகள் கவனம் செலுத்தாத தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

கடந்த நான்கு வருடங்களாக நாடளாவிய ரீதியில் மக்கள் சக்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமூகப் பணி தொடர்பிலும் இதன்போது மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இதன்போது மருத்துவ முகாமும் இடம்பெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்துடன் மக்கள் சக்தி இணைந்து முன்னெடுத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளில் முக்கியத்துவம் வாய்ந்த 8 பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் முயற்சியில் மக்கள் இன்றும் இணைந்துகொண்டனர்.

இந்த கிராமத்தில் V-Force படையணியுடன் பலரும் தம்மை இணைத்துக்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்