ரணில் பதவி விலகி இரண்டாம் நிலை தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 4:17 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டுமெனில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம் என ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாவிடின் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியாதென ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டுமெனில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு அவர் பதவி விலகாதவிடத்து, ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்பதை எவராலும் மறுக்க முடியாது என ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்