குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு 850 வெற்றிடங்கள்

குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு 850 வெற்றிடங்கள்

குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு 850 வெற்றிடங்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 3:59 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு 850 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான வர்த்தமானிஅறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்