அழுத்தங்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்: குழு அறிக்கை கையளிப்பு

அழுத்தங்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்: குழு அறிக்கை கையளிப்பு

அழுத்தங்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்: குழு அறிக்கை கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 3:37 pm

Colombo (News 1st) பல்வேறு இடையூறுகள் மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குழு அறிக்கை வெகுசன ஊடகத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவர் திருமதி ஜெ.எம்.திலகா ஜெயசுந்தரவினால் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரவிடம் கையளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு இடையூறுகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாபதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைவாக இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்