அதிகரிக்கும் கடல் நீர்மட்டமும் அழியும் கடல் வளமும் பேரழிவிற்கான அறிகுறி: ஐ.நா எச்சரிக்கை

அதிகரிக்கும் கடல் நீர்மட்டமும் அழியும் கடல் வளமும் பேரழிவிற்கான அறிகுறி: ஐ.நா எச்சரிக்கை

அதிகரிக்கும் கடல் நீர்மட்டமும் அழியும் கடல் வளமும் பேரழிவிற்கான அறிகுறி: ஐ.நா எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2019 | 4:43 pm

Colombo (News 1st) அதிகரிக்கும் கடல் நீர்மட்டம் மற்றும் உறைபனி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரியமில பயன்பாடு காரணமாக கடல்வளம் அழிந்து வருவதாகவும் இதனால் புயல்கள் மற்றும் கடல் பேரழிவுகள் என்பன ஏற்படுதற்கான அதிகளவு வாய்ப்பு காணப்படுவதாகவும் ஐ.நா வரைவு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலில் மீன்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருகின்றமை மற்றும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை என்பனவற்றினால் பலகோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலக இயற்கை எரிவாயு தரப்பிலான கரியமில வாயு வெளியீட்டில் 60 வீத பங்களிப்பு செய்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் வடதுருவத்தின் மேற்பரப்பில் உள்ள 30 வீத உறைபனி உருகிவிடும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா-வின் 900 பக்கங்களைக் கொண்ட விஞ்ஞான மதிப்பீட்டு அறிக்கை வருடத்திற்கு ஒருமுறை வௌியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்