by Staff Writer 30-08-2019 | 4:13 PM
Colombo (News 1st) Enterprise Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் ரூபா பெறுமதியான கடன்தொகை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கடன் தொகையில் அதிகத் தொகை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சம் வரை அதிகரிக்கும் நோக்கில் Enterprise Sri Lanka நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.