யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளது

யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளது

யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 3:35 pm

Colombo (News 1st) யால தேசிய பூங்கா எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல்  ஒக்டோபர்  31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பூங்கா மூடப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்