நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 8:31 pm

Colombo (News 1st) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அமைப்பிலும் அழகிலும் இராஜகோபுரத்தின் மகிமையிலும் உன்னத இடத்தை வகிக்கும் நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவமான இன்றைய தினம் காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து, மூலஸ்தானத்தில் வேலாக வீற்றிருக்கும் வேலன், வள்ளி தெய்வானை சமேதரராக வலம்வந்தார்.

வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வலம் வந்தனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்த கோடிகள் திரண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இருபத்தைந்து நாள் கொண்ட மகோற்சவம் நாளைய தினம் பூங்காவனத் திருவிழாவுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்