தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 7:41 pm

Colombo (News 1st) தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

நுவரெலியாவிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தில், ஆயுதப்பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேகநபர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுள் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்