ட்ரம்பின் நிர்வாக உதவியாளர் இராஜினாமா

ட்ரம்பின் நிர்வாக உதவியாளர் இராஜினாமா

ட்ரம்பின் நிர்வாக உதவியாளர் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2019 | 5:14 pm

அமெரிக்க அதிபரின் நிர்வாக உதவியாளர் மேடலின் வெஸ்டர்ஹவுட் (Madeleine Westerhout) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபரின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் மேடலின் வெஸ்டர்ஹவுட். இவர் ட்ரம்ப் ஆட்சி தொடங்கியதிலிருந்தே வெள்ளை மாளிகையில் நிர்வாகப் பணியில் இருந்து வந்தவர். இந்நிலையில், அதிபரின் குடும்பத்தினர் மற்றும் வெள்ளை மாளிகை விவகாரம் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய மேடலின், பிறகு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேடலின் வெஸ்டர்ஹவுட் அலுவல் ரீதியாக இல்லாமல் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில தகவல்களைக் கூறியது, அதிபர் ட்ரம்பிற்கு தெரியவந்ததை அடுத்து இராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்