சுற்றுலா ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

சுற்றுலா ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

சுற்றுலா ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 4:21 pm

Colombo (News 1st) சுற்றுலா சபையில் பதிவு செய்துள்ள ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலினால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியினால் விசேட துணைச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு தீர்மானங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டன.

எனினும், இதன் பலன்கள் எதுவும் இதுவரை பயனாளிகளைச் சேரவில்லை என ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

நிதி அமைச்சு, சுற்றுலா சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சுற்றுலாத்துறையுடன் இணைந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலரின் பங்குபற்றுதலுடன் நேற்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சலுகைக்கடன்கள், குத்தகைத் தவணை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக நிவாரணம் வழங்க அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்