அருவக்காட்டிற்கு குப்பை ஏற்றிச்சென்ற லொறி மீது மீண்டும் கல்வீச்சுத் தாக்குதல்

அருவக்காட்டிற்கு குப்பை ஏற்றிச்சென்ற லொறி மீது மீண்டும் கல்வீச்சுத் தாக்குதல்

அருவக்காட்டிற்கு குப்பை ஏற்றிச்சென்ற லொறி மீது மீண்டும் கல்வீச்சுத் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 4:04 pm

Colombo (News 1st) கொழும்பில் இருந்து அருவக்காட்டிற்கு குப்பை ஏற்றிச்சென்ற லொறி மீது மீண்டும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வீச்சுத் தாக்குதலினால் லொறியின் பின்புறம் சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்பதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் குப்பை கொண்டு சென்ற லொறிகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்