மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

by Staff Writer 29-08-2019 | 8:12 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தை மையப்படுத்தி இன்று (29) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 8 808 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 6 388 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4 052 பேரும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.